வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு

கடலாடி வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-14 17:05 GMT
சாயல்குடி, 
கடலாடி வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கர மணியன் ஆய்வு செய்தார். சாயல்குடி அருகே எஸ்.டி.சேது ராஜபுரம் கிராமத்தில் உழவர்அலுவலர் பயண திட்டத்தை ஆய்வு செய்தபோது விவசாயிகளிடம் நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் எஸ்.தரைக்குடியில் அமைக்கப்பட்ட விதைப்பண்ணைகள் ஆய்வின் போது நிலக்கடலையின் மகசூலை அதிகரிக்க ஜிப்சம் இட வேண்டும் எனவும் உளுந்து பயிரின் மகசூலை அதிகரிக்க 2 சதவீத டி.ஏ.பி. கரைசலை இலை வழியாக 2 முறை தெளிப்பதால் பூக்கள் உதிராமலும் காய்கள் தினமாகவும் இருக்கும் கூடுதல் மகசூல் பெறலாம் என்றார். மேலும் கூரான்கோட்டை கிராமத்தில் கூட்டுப்பண்ணை திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பண்ணை எந்திரங்களை ஆய்வு செய்தார். அப்போது உழவர் உற்பத்தியாளர் குழுவினர்களுடன் உரிய முறையில் பராமரித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி, உதவி விதை அலுவலர் பச்சமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் மேனகா, கருணாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்