அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2021-07-14 16:53 GMT
கள்ளக்குறிச்சி

தமிழக விவசாயிகளின் உரிமையை பறிக்கும் நோக்கத்துடன் மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசின் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும் அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில்  கள்ளக்குறிச்சி-கச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு உலக தமிழ் கவிஞர் பேரவையின் பொதுச்செயலாளர் சீதா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் அய்யாமோகன், அம்பேத்கர், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் வரவேற்றார். கல்லை முத்தமிழ் சங்க தலைவர் பழனியப்பன் மற்றும் கதிர்வேல், கோவிந்தன் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ராஜா, ராமகிருஷ்ணன், ராமலிங்கம், சாந்தகுமார், கோவிந்தன், சோழன், ரவி கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்