குண்டர் சட்டம் பாய்ந்தது
குற்றச்செயலில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தை அடுத்துள்ள நயினார்கோவில் அருகே உள்ளது பாண்டியூர். இந்த ஊரை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் சாமிதுரை (வயது47). கடந்த மாதம் தேர்தல் முன்விரோதம் காரணமாக 2 தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மேற்கண்ட சாமிதுரை தரப்பினர் டிராக்டர், மோட்டார் சைக்கிள், வைக்கோல் படப்பு முதலியவற்றை தீவைத்து எரித்து சேதபடுத்தினர். மேலும், வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சாமிதுரையை நயினார் கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சாமிதுரை இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று கலெக்டர் சந்திரகலா சாமிதுரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர