பொம்மிடி அருகே வயதான தம்பதி படுகொலை: குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
பொம்மிடி அருகே வயதான தம்பதியை படுகொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
பொம்மிடி அருகே வயதான தம்பதியை படுகொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தம்பதி படுகொலை
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80), விவசாயி. இவருடைய மனைவி சுலோசனா (76) ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன், மகள்கள் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனால் தம்பதி 2 பேரும் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இதனிடைய கடந்த 12-ந்தேதி இரவு தம்பதி 2 பேரும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 தனிப்படை அமைப்பு
இந்த நிலையில் வயதான தம்பதியை படுகொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயதான தம்பதியை படுகொலை செய்த குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அதன் பின்னர் தான் தம்பதி கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.