ராமநாதபுரம்,
ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பழங்குளம் கிழக்குகடற்கரை சாலை பகுதியில் அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி செங்கல் சூளை மணல் அள்ளி வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்து அதில் இருந்த காருகுடி சொர்ணமூர்த்தி (வயது31), பட்டிணம்காத்தான் சண்முகம் (61) ஆகிய 2 பேரையும் கைது செய்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல, ராமநாத புரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையிலான போலீ சார் அச்சுந்தன்வயல் சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட முயன்றனர். போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். அந்த லாரியை சோதனை யிட்டபோது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடியவர்களை தேடிவருகின்றனர்.