கோவில்பட்டியில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபாசு, தொகுதி செயலாளர் மாரியப்பன், கயத்தாறு பொறுப்பாளர் அய்யாத்துரை, வழக்கறிஞர் பாசறை செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய பொறுப்பாளர் செண்பகராஜ், நகர பொறுப் பாளர் செண்பகபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.