நகை பட்டறையில் 6 பவுன் திருட்டு

திட்டக்குடி நகைபட்டறையில் 6 பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-14 15:00 GMT
திட்டக்குடி,

திட்டக்குடி தெற்கு வீதியை சேர்ந்தவர் ரவி (வயது 55). சிவன் சன்னதி தெருவில் நகை பட்டறை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம்போல் பட்டறையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை வந்துபார்த்தபோது, பட்டறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பட்டறைக்குள் சென்றுபார்த்தார். அப்போது அங்கிருந்து பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த 6 பவுன் நகையை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.

ரூ.2 லட்சம்

 இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் ரவி பட்டறையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், உள்ளே புகுந்து அங்கிருந்த நகையை திருடிச்சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறி்த்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்