ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 13 பேர் பாதிக்கப்பட்டனர்.. இதுவரை மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 829 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 9 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 345 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 145 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 339 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.