ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-13 19:41 GMT
மதுரை, ஜூலை.
மதுரை செல்லூர் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் ராஜா மில் ரோடு பாலத்திற்கு கீழே சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் ஆனையூர், கருப்பசாமி நகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 36), செல்லூர் மீனாம்பாள்புரம் விருமாண்டி (24), மீனாட்சிபுரம் கதிரவன் (21), செல்லூர் இந்திராநகர் அஜித்குமார் (20), சுப்பிரமணியன் (24) என்பது தெரிய வந்தது.
பிரபல ரவுடிகளான இவர்கள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவரை கொலை செய்வதற்காக அங்கு பதுங்கியிருந்ததும் தெரிய வந்தது. பின்னர் செல்லூர் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கத்தி, கயிறு, மிளகாய்பொடி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்