ஆசிரியர் வீட்டில் மடிக்கணினி-செல்போன்கள் திருட்டு

ஆசிரியர் வீட்டில் மடிக்கணினி-செல்போன்கள் திருடுபோனது.

Update: 2021-07-13 19:25 GMT
கரூர்
கரூர்
கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் செங்குட்டுவன்(வயது 50). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் செங்குட்டுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பால்கனியில் வைக்கப்பட்டிருந்த 3 செல்போன்கள், ஒரு டேப்லட் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசில் செங்குட்டுவன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்