மேலும் 30 பேருக்கு கொரோனா

மதுரையில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-13 19:19 GMT
மதுரை,ஜூலை
மதுரை மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 17 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இம்மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 57 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 43 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 25 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை 71 ஆயிரத்து 357 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 560 ஆக உள்ளது. இதில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 37 பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள். இது போல் 155 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள். மதுரையில் நேற்றும் 4-வது நாளாக கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,140 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்