கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது
தொடர் மழையின் காரணமாக ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து இருந்தது.
பொள்ளாச்சி
தொடர் மழையின் காரணமாக ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து இருந்தது.
கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தை கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கி நடத்தினார்.
ஆனைமலை மற்றும் சுற்று வட்டார மற்றும் உடுமலை பகுதி விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். கொப்பரை தேங்காய் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது.
இதற்கிடையில் தொடர் மழையின் காரணமாக ஏலத்திற்கு கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து காணப் பட்டது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் விலை அதிகரித்தது.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-
வரத்து குறைவு
ஏலத்திற்கு 108 விவசாயிகள் 301 மூட்டை கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர். இதை 10 வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.
171 மூட்டை முதல்தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.97.60 முதல் ரூ.104.15 வரையும், 130 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.70.70 முதல் ரூ.80.30 வரையும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட 400 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து இருந்தது.
இதற்கிடையில் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ஒரு ரூபாய் அதிகரித்தது. கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கொப்பரை தேங்காய்களை வெயிலில் காய வைக்க முடியவில்லை. இதன் காரணமாக வரத்து குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.