பச்சூர் ெரயில் நிலையத்தில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பச்சூர் ெரயில் நிலையத்தில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்டறம்பள்ளி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் ெரயில் நிலைய பகுதியில் நாட்டறம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது பச்சூர் ெரயில் நிலையம் அருகே 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை பார்த்தனர் உடனடியாக 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.