திருவண்ணாமலை மாவட்டத்தில் 71 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-07-13 17:56 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று 71 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,121 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 862 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதில் 49 ஆயிரத்து 118 பேர் குணமடைந்து உள்ளனர். 623 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்