கோத்தகிரியில் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிப்பு
கோத்தகிரியில் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளால் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொற்று பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி நடமாடும் சுகாதார குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், மார்க்கெட், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, கோத்தகிரி தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.