சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோவில் கைது

தரங்கம்பாடி அருகே சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோவில் கைது ெசய்யப்பட்டாா்.

Update: 2021-07-13 17:35 GMT
சீர்காழி:
தரங்கம்பாடி அருகே சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோவில் கைது  செய்யப்பட்டாா்.
போக்சாவில் வாலிபா் கைது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பூதனூர் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் மகன் அய்யப்பன் (வயது 20) கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அய்யப்பன், வீட்டில் இருந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூதனூர் கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த சிறுமியை மீட்டதுடன், அவரை கடத்தி சென்ற அய்யப்பனை கைது செய்தனர்.
பின்னர் இதுதொடர்பாக சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்