மதுவிற்ற 12 பேர் சிக்கினர்
தேனி மாவட்டத்தில் மது விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து சென்ற போது பாலக்கோம்பையில் மதுவிற்ற அதே ஊரைச் சேர்ந்த போத்திராஜா (வயது 34) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 7 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜதானி அருகே அம்மாபட்டியில் மதுவிற்ற அதே ஊரைச் சேர்ந்த வைரம் (42) என்பவரையும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 7 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவர் உள்பட மாவட்டம் முழுவதும் மதுவிற்ற 12 பேரை போலீசார் ஒரே நாளில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.