ஆந்திர மாநில நாவல் பழம் கிலோ ரூ.250-க்கு விற்பனை
கம்பத்தில் ஆந்திர மாநில நாவல் பழம் கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கம்பம்:
கம்பம் பகுதியில் கோடைகாலத்தில் விற்பனைக்கு வரும் நாவல் பழம், 3 மாதங்கள் மட்டுமே கிடைக்கும். நாவல் பழம் மிகவும் மருத்துவ குணம் கொண்டது. இந்த நாவல் பழம் சீசன் மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை இருக்கும்.
தற்போது தமிழகத்தில் நாவல் பழம் வரத்து குறைந்தது. இதனால் ஆந்திர மாநிலம் கடப்பா என்னும் பகுதியில் இருந்து ஒட்டுரக நாவல் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. கம்பத்தில் உழவர்சந்தை, வேலப்பர்கோவில் தெரு, போக்குவரத்து சிக்னல் ஆகிய பகுதிகளில் தள்ளுவண்டிகள் மூலம் நாவல் பழம் விற்பனை படுஜோராக நடக்கிறது.
ஒரு கிலோ நாவல் பழம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நாவல் பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.