கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வீரபாண்டி:
தர்மபுரியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27) கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவி திவ்யா மற்றும் 2 மகன்களுடன் திருப்பூர் வஞ்சிபாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தார். நாகராஜூக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அவ்வப்போது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் திவ்யா கோபித்துக்கொண்டு 2 மகன்களையும் விட்டு விட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த நாகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் நாகராஜ் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.