தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சென்னை வடக்கு மண்டல கமிஷனராக அமுதா பொறுப்பு ஏற்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சென்னை வடக்கு மண்டல கமிஷனராக அமுதா பொறுப்பு ஏற்பு.

Update: 2021-07-13 14:56 GMT
சென்னை,

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சென்னை வடக்கு மண்டல அலுவலக கிரேடு-1 மண்டல கமிஷனராக சி.அமுதா நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் வருங்கால வைப்புநிதி உதவி கமிஷனராக கடந்த 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கோவை, தாம்பரம், சேலம் மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

சென்னை வடக்கு மண்டல அலுவலக கிரேடு-1 மண்டல கமிஷனராக பொறுப்பு ஏற்றதற்கு முன்னதாக, பெங்களூரு மண்டல அலுவலக கிரேடு-1 அதிகாரியாக அமுதா பணியாற்றினார். சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் கமிஷனர்-2 பிரனித் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்