2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி.
சென்னை,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சிற்றரசன் (வயது 28). என்ஜினீயரான இவர், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியிருந்து, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சிற்றரசன், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் அவர்களது அறைகளில் சென்று தூங்கச்சென்றனர்.
இந்தநிலையில், அதே குடியிருப்பில் வசித்து வந்த ராமு என்பவர் வெளியே செல்வதற்கு கீழே வந்தபோது, சிற்றரசன் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிற்றரசன், 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.