தென்காசியில் புதிதாக 17 பேருக்கு கொரோனா
தென்காசியில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 26 ஆயிரத்து 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 ஆயிரத்து 949 பேர் குணமடைந்துள்ளனர். 194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 476 பேர் இறந்து உள்ளனர்.