12 பேருக்கு கொரோனா தொற்று

12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-07-12 22:42 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களில் 14 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 180 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 655 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 4,914 பேருக்கு போடப்பட்டது. தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி 7,380 கையிருப்பில் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்