பரோலில் வந்த பெண் கைதி திடீர் சாவு

சேர்ந்தமரம் அருகே பரோலில் வந்த பெண் கைதி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-12 22:02 GMT
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே வல்லராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரகுருபரன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (வயது 46). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் கணவரை கொலை செய்தார். இதையடுத்து சுப்புலட்சுமியை போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து சுப்புலட்சுமி பரோலில் வெளியே வந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்