தவறான முறையில் அடங்கல் சான்று அளித்த சில்லத்தூர் கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் தஞ்சை கோட்டாட்சியர் நடவடிக்கை

தவறான முறையில் அடங்கல் சான்று அளித்த சில்லத்தூர் கிராம நிர்வாக அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை கோட்டாட்சியர் வேலுமணி உத்தரவிட்டார்.

Update: 2021-07-12 19:45 GMT
ஒரத்தநாடு:-

தவறான முறையில் அடங்கல் சான்று அளித்த சில்லத்தூர் கிராம நிர்வாக அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை கோட்டாட்சியர் வேலுமணி உத்தரவிட்டார்.

கலெக்டருக்கு புகார்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சில்லத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக கார்த்திகேயன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். 
இவர் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவரது பெயரில் உள்ள நிலத்துக்கு மற்றொரு நபருக்கு தவறான முறையில் அடங்கல் சான்று அளித்ததாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார் சென்றது.

பணியிடை நீக்கம்

இந்த புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் மேற்கொண்ட விசாரணையில், கார்த்திகேயன், தவறான முறையில் அடங்கல் சான்று அளித்திருப்பது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து சில்லத்தூர் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்