வருஷாபிஷேக விழா

வருஷாபிஷேக விழா

Update: 2021-07-12 19:44 GMT
தளவாய்புரம்
சேத்தூர் மேட்டுப்பட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வருஷாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து ஹோம குண்டம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டது. பின்னர் சுவாமிக்கும், கோபுர கலசத்துக்கும் புனித நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து பெருமாள் மற்றும் தாயாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்