கலசபாக்கம் அருகே அனுமதியின்றி நடந்த விளையாட்டு போட்டி தடுத்து நிறுத்தம்
அனுமதியின்றி நடந்த விளையாட்டு போட்டி தடுத்து நிறுத்தம்
கலசபாக்கம்
கலசபாக்கத்தை அடுத்த ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் கடந்த 10-தேதி கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் திருவண்ணாமலை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொள்ள வந்து இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது ஊரடங்கு வரும் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதியின்றி விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது குறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் போட்டியை தடுத்து நிறுத்திய போலீசார் இதற்கு ஏற்பாடு ெசய்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.