மரக்கன்றுகள் நடும் விழா

சிங்கம்புணரி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

Update: 2021-07-12 17:49 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலம்பட்டி ஊராட்சியில் தி.மு.க. மற்றும் உதவும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து மரக்கன்று நடும் விழாவை நடத்தியது. தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில இணைச் செயலாளர் பூரணசங்கீதா சின்னமுத்து தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கண்ணமங்கலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செம்மலர்  வரவேற்றார். உதவும் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ரோகினி, மருத்துவர் அருள்மணி நாகராஜன், சமூக சேவகர் குகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்