சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2021-07-12 17:07 GMT
கோத்தகிரி

கோத்தகிரி நகரில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, மார்க்கெட் உள்பட முக்கிய பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. மேலும் சாலைகளில் கால்நடைகள் உலா வருவதால், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. 

கடந்த சில ஆண்டுகளாக கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரியவிடும் உரிமையாளர்களுக்கு, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்தது. இதன் காரணமாக கால்நடைகள் தொல்லை கட்டுப்படுத்தப்பட்டது.  

தற்போது அந்த நடவடிக்கை இல்லை. இதனால் அந்த நிலை மீண்டும் தலைதூக்கி உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றறித்திரியும் கால்நடைகளை பிடித்து தொண்டு பட்டியில் அடைக்கவும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்