கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முடி திருத்தும் தொழிலாளர்கள் முற்றுகை

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முடி திருத்தும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-12 17:00 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் குடியிருப்பு வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முடிதிருத்தும் தொழிலாளர்கள்

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடியிருந்து வரும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கும், குடியிருப்பு வீடு இல்லாதவர்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5-வது தூண் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் தாவீதுராஜா, அனைத்து ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட பொது செயலாளர் ராஜசேகரன், சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவி கலெக்டர் உறுதி

பின்னர் போராட்டக்குழுவினர் தங்களது கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் வழங்கினர். 
மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்