120 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகாசி அருகே 120 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தனேரி பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றிவரும் முன்கள பணியாளர்கள், பொது மக்கள் என மொத்தம் 120 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் லட்சுமண பெருமாள் செய்திருந்தார்.