சித்தேரியில் இரைதேடும் வெளிநாட்டு பறவைகள்
கரைவெட்டியில் இருந்து வெளிநாட்டு பறவைகள் அரியலூருக்கு பறந்து வந்து சித்தேரியில் இரை தேடுகின்றன.
அரியலூர்:
வெளிநாட்டு பறவைகள்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கரைவெட்டி ஏரியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து பலவிதமான பறவைகள் வந்து, செல்வது வழக்கம். அதன்படி தற்போது ஏராளமான வெளிநாட்டு பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளன.
பறவைகளை பார்ப்பதற்கு அங்கு தொலைநோக்கியுடன் கூடிய காட்சி மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள், அப்பகுதி மக்கள் உள்ளிட்டோர், பறவைகள் சரணாலயத்திற்கு சென்று, வெளிநாட்டு பறவைகளை தொலைநோக்கி மூலம் கண்டுகளித்து வருகின்றனர்.
மீன் பிடிப்பதை...
மேலும் சரணாலயத்திற்கு வரும் பறவைகளில் சில அரியலூர் நகரில் உள்ள சித்தேரிக்கு இரை தேடி வந்து செல்கின்றன. அவை பகல் நேரத்தில் ஏரி நீரில் நின்று மீன்களை இரையாக உட்கொண்டபின், இரவில் கரைவெட்டிக்கு பறந்து சென்று விடுகின்றன.
மாலை நேரத்தில் ஏரியில் பறவைகள் மீன் பிடிப்பதையும், அவை பறந்து செல்வதையும் பொதுமக்கள் பலர் வந்து பார்த்து செல்கின்றனர்.