மேலும் 29 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 37 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 423 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 389 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி 647 பேருக்கு போடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.