நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செங்கோட்டை ஒன்றிய தலைவர் முகம்மது சபீக் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், திவான், சங்கர், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன் சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுடலை நன்றி கூறினார்.