கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் பலியானார்கள்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 180 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 175 பேருக்கு தொற்று பாதித்து இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. சேலம் மாநகராட்சி பகுதியில் 35 பேரும், சேலம் ஒன்றிய பகுதி, கொளத்தூரில் தலா ஒருவரும் பாதித்து உள்ளனர். கொங்கணாபுரத்தில் 2 பேரும், வீரபாண்டியில் 3 பேரும், சங்ககிரி, நங்கவள்ளி, காடையாம்பட்டியில் தலா 6 பேரும், மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூரில் தலா 7 பேரும், மகுடஞ்சாவடியில் 9 பேரும், எடப்பாடியில் 12 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இதே போல் அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டியில் தலா ஒருவரும், வாழப்பாடி, தலைவாசல், கெங்கவல்லியில் தலா 3 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே போன்று ஆத்தூர், மேட்டூர் நகராட்சியில் தலா ஒருவர் என மாவட்டம் முழுவதும் நேற்று 175 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மொததம் 2 ஆயிரத்து 86 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 9 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.