குளித்தலை
குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் குளித்தலை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குப்பாச்சிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த குளித்தலை அருகே உள்ள சரளை தோட்டம் பகுதியை சேர்ந்த கொத்தனார் வைரமூர்த்தி (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.