சூதாடிய 5 பேர் கைது
பாளையங்கோட்டை அருகே சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள கோட்டூர் பகுதியில் சிலர் சூதாடிக் கொண்டிருப்பதாக, பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு இருந்த 5 பேர் தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் 5 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 34), செல்வம் (36), முகமது சர்க்கார் (39), சித்திக் (38), பீர் முகமது (37) ஆகியோர் என்பதும், 5 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது. உடனே போலீசார் கணேசன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 280-ஐ பறிமுதல் செய்தனர்.