ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுவயலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-07-11 18:31 GMT
காரைக்குடி,

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரிகளை குறைத்து விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் காரைக்குடி புதுவயலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாடை கட்டி அதன் மீது கியாஸ் சிலிண்டரையும், மொபட்டையும் வைத்து ஊர்வலமாக வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சாக்கோட்டை ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் முகமது பயாஸ் தலைமை தாங்கினார். புதுவயல் நகர செயலாளர் அப்துல் பாசித் முன்னிலை வகித்தார். இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் அக்னி சகுபர் சாதிக், பழனிபாபா பேரவையின் மாநில செயலாளர் நவுஷாத் அலிகான், ஆதி தமிழர் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திருமுருகச்செல்வம், விடுதலை வேங்கை கட்சியின் செயல் தலைவர் மனோகரன், பச்சைத் தமிழகம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் கார்த்திக் ஆகியோர் பேசினார்கள்.

மேலும் செய்திகள்