தொடர் மழையால் மறுகால் பாயும் கண்மாய்கள்
தொடர் மழையால் மறுகால் பாயும் கண்மாய்கள்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மேலும் நிலையூர் கால்வாயில் மழை உபரி தண்ணீர்வரத்து அதிகரித்து நிலையூர் கண்மாய்க்கு வருகிறது. மேலும் நிலையூர் கண்மாய் சார்ந்த வாய்க்கால் வழியே சூரக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தொடர் மழையால் சூரக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதுதொடர்பாக சூரக்குளம் விவசாயிகள் கூறும்போது, கண்மாயின் உள்பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் முளைத்து உள்ளது. மேலும் கண்மாய் மேடாக உள்ளது. இதனால் விவசாயத்திற்காக கண்மாயில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனால் கண்மாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியவில்லை. கிணற்று தண்ணீரை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். ஆகவே கண்மாய்க்குள் அடாந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதோடு கண்மாயை முழுமையாக தூர்வாருவதற்கு அரசு முன்வர வேண்டும் என்றனர்.
மேலும் தொடர் மழையால் மதுரை நகர் பகுதியின் நீர்பிடிப்பு பகுதியான வண்டியூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.