புவனகிரி அருகே தடுப்பு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் சாவு
புவனகிரி அருகே தடுப்பு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் உயிரிழந்தார்.
புவனகிரி,
புவனகிரி அடுத்த தெற்கு திட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் பிரபாகரன் (28). என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பிரபாகரன், சொந்த ஊருக்கு வந்தார்.
பின்னர் அன்றைய தினம் இரவில் தனது நண்பர்களை பார்ப்பதற்காக தெற்கு திட்டையில் இருந்து பி.முட்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சாவு
அப்போது, தம்பிக்கு நல்லான் பட்டினம் கிராமத்தில் உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு கட்டையில் மோதியது.
இதில் படுகாயமடைந்த பிரபாகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதபாமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.