இளையான்குடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

இளையான்குடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2021-07-11 16:58 GMT
இளையான்குடி,

இளையான்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) அன்று உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே இளையான்குடி, சாலையூர், மல்லிபட்டினம், நகரகுடி, கீழாயூர், லட்சுமிபுரம், குமாரக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை இளையான்குடி துணை மின் நிலைய செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்