அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள்

அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Update: 2021-07-11 16:25 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில்  மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிலிண்டர், ஸ்ட்ரெச்சர், வீல்சேர், குளிர்சாதனபெட்டி, மின்விசிறி உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. 
மேலும், சங்கத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆரோக்கியசாமி குடும்பத்தின் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியமான ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தினை சுகாதாரத்துரை அமைச்சரிடம் வழங்கினர். கலெக்டர் சந்திரகலா, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முதன்மைக்கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி மற்றும் ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் அன்புசேவியர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், அமைப்புச் செயலாளர் கருணாகரன், மாவட்ட பொருளாளர் இமானுயேல் ஜேம்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்