கோவில் காளை இறப்பு

பரமக்குடியில் கோவில் காளை இறந்தது.

Update: 2021-07-11 15:42 GMT
பரமக்குடி, 
பரமக்குடி உழவர் சந்தை அருகே கல்லடியான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குகோழி கடை நடத்தி வரும் கணேசன் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு காளை மாடு ஒன்றை நேர்த்திக்கடனாக விட்டுள்ளார். அந்த கோவில் காளையை அவரே தினமும் பராமரித்து வளர்த்து வந்துள்ளார். 
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக அந்த காளை மாட்டிற்கு  உடல்நிலை குறைவு ஏற்பட்டது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி அந்த மாடு பரிதாபமாக உயிரிழந்தது. 
அந்த மாட்டிற்கு கணேசன் உள்பட அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து  இறுதி அஞ்சலி செலுத்தி பரமக்குடி வைகை ஆற்றில் அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்