கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2021-07-11 15:06 GMT
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி


குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் துறை கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், சூப்பிரண்டு கே.ஸ்டாலின் ஆலோசனைப்படி பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, கோபு, போலீசார் சுந்தரேசன், பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் கோவை-பாலக்காடு மெயின்ரோடு வாளையார் போலீஸ் சோதனை சாவடியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர். 

சோதனையில், அதில்தமிழக அரசு பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி 2 டன்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கேரளாவிற்கு கடத்த முயன்றரேஷன் அரிசியை வாகனத்துடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


பின்னர் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற சூலூரைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 28) என்பவர் மீது பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்துபவர்கள் மற்றும் அதற்கு துணைபோகும் நபர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்