மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் - மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்தது
மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அகோரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிசங்கர், மாவட்ட மாணவரணி செயலாளர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் ஆகியவற்றின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுஜாதா, நகர மகளிர் அணி செயலாளர் ரெஜினா, சீர்காழி நகர செயலாளர் சந்துரு, ஒன்றிய செயலாளர் லட்சுமிநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.