கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சித்தர் கோவில் அருகே விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த மேட்டுத்தெருவை சேர்ந்த பிச்சை மகன் பாலமுருகனை (வயது 29) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 730 கிராம் அடங்கிய 21 கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலமுருகன் மீது ஏற்கனவே மங்களமேடு போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.