தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
விருதுநகர் அருகே ரெயில் முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள தனியார் கல் குவாரி நிறுவனத்தில் வேலை பார்த்தவர் பாண்டியராஜன் (வயது 31). சாயல்குடியை சேர்ந்த இவரது தந்தை சண்முகவேல் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இந்நிலையில் பாண்டியராஜன் நேற்றுமுன்தினம் இரவு விருதுநகர்- துலுக்கப்பட்டி ெரயில்நிலையங்களுக்கிடையே தென் மாவட்டங்களுக்கு செல்லும் ெரயில் பாதை வழியாக சென்ற ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தூத்துக்குடி ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.