மக்கள்நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-10 20:53 GMT
விருதுநகர், 
விருதுநகரில் பழைய பஸ் நிலையம் அருகே மக்கள் நீதி மய்யம் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து வைத்திருந்தனர். மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மேற்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்