ஆஸ்பத்திரிக்கு சென்றபோது ஆம்புலன்சில் பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது
மதுரவாயல் அருகே ஆஸ்பத்திரிக்கு சென்றபோது ஆம்புலன்சில் பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது.
பூந்தமல்லி,
ஆவடியை சேர்ந்தவர் லாவண்யா (வயது 26). கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை பிரசவத்துக்காக சென்னை எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் டிரைவர் இளையராஜா மற்றும் மருத்துவ உதவியாளர் ஆனந்த் இருவரும் உடன் இருந்தனர்.
மதுரவாயல் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது லாவண்யாவுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. சிறிது நேரத்தில் அவருக்கு ஆம்புலன்சிலேயே சுக பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாய், சேய் இருவரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.