திருச்செங்கோடு அருகே மது கடத்தி வந்த 4 பேர் கைது
திருச்செங்கோடு அருகே மது கடத்தி வந்த 4 பேர் கைது
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பகுதியில் திருச்செங்கோடு ரூரல் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 450 மதுபாட்டில்கள் பதுக்கி கடத்தி கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 48), பூவராகவன் (40), வேலுசாமி (35), நாகராஜ் (35) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 450 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
=========